மருந்துகள் பற்றி அறிவோம்
Sodium valproate
அறிமுகம்
இந்த மருந்தானது அடிப்படையில் வலிப்பு நோயை குணப்படுத்தும் மருந்து வகைகளில் ஒன்றாக இருக்கின்றது. இது உளநோய்களிற்கான சிகிச்சையிலும் உபயோகப்படுத்தப்படுகின்றது.
பொதுவான பயன்பாடு
- வலிப்பு நோய்
- இருதுருவ மனோபாவக் கோளாறு
- உளமாய நோய்களின் சிகிச்சையில் ஒரு துணைமருந்தாக
பொதுவான பக்க விளைவுகள்
- வயிற்று வலி, வயிற்றுப் பிரட்டல்
- வாய் உலர்தல்
- உடல் நடுக்கம், சோர்வு
- கவனச்சிதறல்
- உடல் எடை அதிகரித்தல்
- தலை முடி உதிர்வு, தலைமுடியின் வடிவமைப்பில் மாறுதல்
- ஒழுங்கற்ற மாதவிடாய்
மருத்துவரை நாடவும்
பொதுவான பக்கவிளைவுகள் ஏற்பட்டால், அதுபற்றி உங்களுக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவரிடம் தெரிவிக்கவும். அரிதான, தீவிரமான, அல்லது கரிசனைக்குரிய வேறு பக்கவிளைகள் ஏற்படுமிடத்து, அருகிலுள்ள ஒரு வைத்தியரை, அல்லது வழமையாகச் சிகிச்சையளிக்கும் உளமருத்துவரை நாடவும்.