Mental Health Society Tellippalai, Jaffna.
Close

Amisulpride

மருந்துகள் பற்றி அறிவோம்

Amisulpride

அறிமுகம்

Amisulpride எனும் மருந்தானது, பாரிய உளமாய நோயுடையவர்களுக்குப் பயன்படுத்தப்படும் முக்கிய மருந்துகளில் ஒன்றாக இருக்கின்றது.

பெதுவான பயன்பாடுகள்

  • உளப்பிளவை (நோயைக் குணப்படுத்தவும், நோய் மீண்டும் வராமல் தவிர்க்கவும் உபயோகிக்கப்படுகிறது)
  • (ஏனைய உளநோய்களுடன் இணைந்திருக்கும்) உளமாய அறிகுறிகளைக் கட்டுப்படுத்துதல்.

பொதுவான பக்கவிளைவுகள்

  • Extra Pyramidal Side effects (மருந்தின் அளவு கூடும் போது)
    • உடற் தசையில் (பொதுவாக முகம், கழுத்தையண்டிய தசைத் தொகுதிகளில்) சடுதியான சுருக்கம் ஏற்படல்
    • ஓரிடத்தில் இருக்க முடியாமமை, கால்களை அசைத்துக் கொண்டிருக்க வேண்டும் போன்ற உணர்வு
    • கை கால் நடுக்கம், தசை இறுக்கம், உடற் செயற்பாடுகளின் வேகம் குறைவடைதல் போன்ற பாக்கின்சன் நோயின் அறிகுறிகள்
    • நீண்ட காலம் உபயோகிக்கின்றபோது, உதடுகளைச் சப்புதல், தன்னிச்சையான நா அசைவுகள், மற்றும் தன்னிச்சையான ஏனைய அசைவுகள் ஏற்படுதல்
  • Prolactin எனும் ‘ஓமோன்’ அதிகரிப்பு ஏற்படுவதனால், மார்பகங்கள் வளர்தல் (குறிப்பாக ஆண்களில்), பால் சுரத்தல், மாதவிடாய் ஏற்படாத நிலை போன்றவை உருவாகலாம்.
  • உடல் நிறை அதிகரிப்பு
  • நித்திரைக் குழப்பம், அல்லது அதிகரித்த தூக்கம்
  • பதகளிப்பு, அந்தரமான ஒரு மனநிலை
  • மலச்சிக்கல்

மருத்துவரை நாடவும்

பொதுவான பக்கவிளைவுகள் ஏற்பட்டால், அதுபற்றி உங்களுக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவரிடம் தெரிவிக்கவும். அரிதான, தீவிரமான, அல்லது கரிசனைக்குரிய வேறு பக்கவிளைகள் ஏற்படுமிடத்து, அருகிலுள்ள ஒரு வைத்தியரை, அல்லது வழமையாகச் சிகிச்சையளிக்கும் உளமருத்துவரை நாடவும்.