Mental Health Society Tellippalai, Jaffna.
Close

Aripiprazole

மருந்துகள் பற்றி அறிவோம்

Aripiprazole

அறிமுகம்

Aripiprazole எனும் மருந்தானது, பாரிய உளமாய நோயுடையவர்களுக்குப் பயன்படுத்தப்படும் முக்கிய மருந்துகளில் ஒன்றாக இருக்கின்றது. இது மனநிலை மாற்றங்களைச் சமப்படுத்தி வைத்திருப்பதில் உதவக்கூடிய ஒரு மருந்தாகவும் தொழிற்படுகின்றது.

பொதுவான பயன்பாடுகள்

  • உளப்பிளவை
  • பித்து நோய் மற்றும் இருதுருவ மனோபாவக் கோளாறு (ஏனைய மருந்துகளுடன் இணைந்ததாக)
  • மனச்சோர்வு (மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகளுடன் இணைந்து)

பொதுவான பக்கவிளைவுகள்

  • தலைசுற்றுதல்
  • நித்திரையின்மை
  • அதியின்மை, ஓரிடத்தில் இருக்கமுடியாமல் கால்களை அசைத்துக் கொண்டிருக்க வேண்டும் போன்ற ஓர் அந்தரமான உணர்வு
  • வயிற்றுப்பிரட்டடல், சத்தி, மலச்சிக்கல்

அரிதாக ஏற்படும்பக்கவிளைவுகள்

  • வலிப்பு
  • உடலசைவுகளின் ஒருங்கிணைவுப் பிரச்சினைகள்

மருத்துவரை நாடவும்

பொதுவான பக்கவிளைவுகள் ஏற்பட்டால், அதுபற்றி உங்களுக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவரிடம் தெரிவிக்கவும். அரிதான, தீவிரமான, அல்லது கரிசனைக்குரிய வேறு பக்கவிளைகள் ஏற்படுமிடத்து, அருகிலுள்ள ஒரு வைத்தியரை, அல்லது வழமையாகச் சிகிச்சையளிக்கும் உளமருத்துவரை நாடவும்.