மருந்துகள் பற்றி அறிவோம்
Benzhexol
அறிமுகம்
இது பாக்கின்சன் நோய் அறிகுறிகளைக் குறைப்பதற்காககப் பயன்படுத்தப்படும் முக்கிய மருந்துகளில் ஒன்றாகும். உளமருத்துவத்தில் உளமாய நோய்களுக்கு எதிரான மருந்துகளைப் பாவிக்கின்றபோது ஏற்படுகின்ற பாக்கின்சன் அறிகுறிகளைக் குறைப்பதில் இது பெரிதும் உதவுகின்றது.
பொதுவான பயன்பாடுகள்
- பாக்கின்சன் நோய்
- மருந்துகளால் ஏற்படும் extra pyramidal பக்கவிளைவுகள் மற்றும் பாக்கின்சன் நோய் நிலமை
பொதுவான பக்கவிளைவுகள்
- வாய் உலர்தல்
- மலச்சிக்கல்
- கண்பார்வை மங்கலாதல்
- சல வெளியேற்றத்தை ஆரம்பிப்பதில் சிரமங்கள்
அரிதான பக்க விளைவுகள்
- இதயத்துடிப்பு வீதம் அதிகரித்தல்
- மறதி
- மாறாட்டம்
மருத்துவரை நாடவும்
பொதுவான பக்கவிளைவுகள் ஏற்பட்டால், அதுபற்றி உங்களுக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவரிடம் தெரிவிக்கவும். அரிதான, தீவிரமான, அல்லது கரிசனைக்குரிய வேறு பக்கவிளைகள் ஏற்படுமிடத்து, அருகிலுள்ள ஒரு வைத்தியரை, அல்லது வழமையாகச் சிகிச்சையளிக்கும் உளமருத்துவரை நாடவும்.