Mental Health Society Tellippalai, Jaffna.
Close

Citalopram / Escitalopram

மருந்துகள் பற்றி அறிவோம்

Citalopram / Escitalopram

அறிமுகம்

இவைகளும் மனச்சோர்வு நோயை குணப்படுத்த உதவும் மருந்து வகைகளாகும்.

பயன்பாடு

  • மனச்சோர்வு
  • எண்ணச் சுழற்சி நோய்
  • பீதி நோய்
  • சமூக (சபை) அச்ச நோய்
  • மனவடு நோய்

பொதுவான பக்க விளைவுகள்

  • வயிற்றுப்பிரட்டல், நெஞ்செரிவு
  • பசி குறைவடைதல்
  • நித்திரைக் குழப்பம்
  • வாய் உலர்தல்
  • தலையிடி, தலைச்சுற்று, நடுக்கம்
  • பதகளிப்பாக உணர்தல்
  • பாலியல் செயற்பாட்டில் குறைபாடுகள்
  • உடலில் சோடியம் உப்பின் அளவு குறைவடைதல்

அரிதாக ஏற்படும் பக்கவிளைவுகள்

  • இரத்தக் கசிவுகள்
  • வலிப்பு
  • பித்து நோய் ஏற்படல்

 

 

மருத்துவரை நாடவும்

பொதுவான பக்கவிளைவுகள் ஏற்பட்டால், அதுபற்றி உங்களுக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவரிடம் தெரிவிக்கவும். அரிதான, தீவிரமான, அல்லது கரிசனைக்குரிய வேறு பக்கவிளைகள் ஏற்படுமிடத்து, அருகிலுள்ள ஒரு வைத்தியரை, அல்லது வழமையாகச் சிகிச்சையளிக்கும் உளமருத்துவரை நாடவும்.