மருந்துகள் பற்றி அறிவோம்
Clozapine
அறிமுகம்
இது பாரிய உளமாய நோய்களுக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகளில் ஒன்றாகும். பொதுவாக ஏனைய மருந்துகளுக்குக் கட்டுப்படாத உளமாய நோய் அறிகுறிகளைக் குறைப்பதற்காக இந்த மருந்து பயன்படுத்தப்படுகின்றது.
பயன்பாடு
- உளப்பிளவை நோய்
பொதுவான பக்க விளைவுகள்
- நித்திரைத் தூக்கம்
- இருதயத் துடிப்பு அதிகரித்தல்
- உமிழ்நீர் வடிதல் (குறிப்பாக இரவுகளில்)
- மலச்சிக்கல்
- உடல்நிறை அதிகரிப்பு
- குருதியில் குளுக்கோஸ் மற்றும் கொலஸ்ரோல் அதிகரிப்பு
- மருந்தை திடீரென நிறுத்தும்போது நோய் அறிகுறிகள் மறுகலித்தல்
அரிதாக ஏற்படும் பக்கவிளைவுகள்
- இரவு வேளைகளில் கட்டுப்பாடின்றிய சலவெளியேற்றம்
- குருதியில் வெண்குருதிக் கலங்களின் எண்ணிக்கை குறைவடைதல்
- இருதயம் விரிவடைதல்
- குடலசைவு அற்றுப்போதல்
Monitoring
இந்த மருந்தை உபயோகிக்கின்றபோது ஒழுங்கான இடைவெளிகளில் இரத்தப் பரிசோதனைகள் மற்றும் ஏனைய பரிசோதனைகளைச் செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.
மருத்துவரை நாடவும்
பொதுவான பக்கவிளைவுகள் ஏற்பட்டால், அதுபற்றி உங்களுக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவரிடம் தெரிவிக்கவும். அரிதான, தீவிரமான, அல்லது கரிசனைக்குரிய வேறு பக்கவிளைகள் ஏற்படுமிடத்து, அருகிலுள்ள ஒரு வைத்தியரை, அல்லது வழமையாகச் சிகிச்சையளிக்கும் உளமருத்துவரை நாடவும்.