மருந்துகள் பற்றி அறிவோம்
Disulfiram
அறிமுகம்
இந்த மருந்தானது மதுவடிமை நிலையிலிருந்து விடுபட விரும்புவர்களுக்கு உதவுகின்ற ஒரு மருந்தாக இருக்கின்றது. இந்த மருந்து ஒருவரது உடலில் இருக்கின்றபோது, அவர் மதுவை அருந்துவாராயின், மது – மருந்து இடைத்தாக்கத்தினால் பாரிய உடல் அறிகுறிகளும், ஆபத்தை விளைவிக்கக் கூடிய நிலைமைகளும் தோன்றலாம்.
பயன்பாடு
மதுவடிமை நிலையிலிருந்து விடுபடுதல்
பொதுவான பக்க விளைவுகள் (மதுவை உள்ளெடுக்காத நிலைமையில்)
- வயிற்றுப் பிரட்டல்
- தலைவலி
- உடல் சோர்வு
- சுவை மாற்றம்
- முகப்பரு
ஆபத்தான பக்க விளைவுகள் (மதுவை உள்ளெடுக்கின்ற நிலைமைகளில்)
- வயிற்றுப் பிரட்டல், வாந்தி
- நெஞ்சு மற்றும் முகப் பகுதிகள் சிவந்து போதல், எரிவு ஏற்படல்
- தலை சுற்றுதல், கடுமையான தலையிடி
- நெஞ்சுப் படபடப்பு, அதிக வியர்வை
- மயக்கம் வருவது போன்ற உணர்வு
மருத்துவரை நாடவும்
பொதுவான பக்கவிளைவுகள் ஏற்பட்டால், அதுபற்றி உங்களுக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவரிடம் தெரிவிக்கவும். அரிதான, தீவிரமான, அல்லது கரிசனைக்குரிய வேறு பக்கவிளைகள் ஏற்படுமிடத்து, அருகிலுள்ள ஒரு வைத்தியரை, அல்லது வழமையாகச் சிகிச்சையளிக்கும் உளமருத்துவரை நாடவும். குறிப்பாக, இந்த மருந்தை உள்ளெடுத்துக் கொண்டிருக்கையில் மது அருந்தும்போது ஏற்படுகின்ற தாக்க விளைவுகளுக்கு உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது தேவையானது.