மருந்துகள் பற்றி அறிவோம்
Fluphenazine decanoate
அறிமுகம்
Fluphenazine decanoate எனும் மருந்தானது, பாரிய உளமாய நோயுடையவர்களுக்குப் பயன்படுத்தப்படும் முக்கிய மருந்துகளில் ஒன்றாக இருக்கின்றது.
பொதுவாக, மருந்தை ஒழுங்காக உள்ளெடுக்கச் சிரமங்களை எதிர்கொள்பவர்களுக்கு உதவக்கூடிய, நீண்டகாலம் உடலில் தங்கிப் பலனளிக்கும் ஊசி மருந்தாக இது உபயோகப்படுத்தப்படுகின்றது.
பொதுவான பயன்பாடுகள்
- உளமாய நோய்
- இருமுனை மனோபாவக் கோளாறு
பொதுவான பக்கவிளைவுகள்
- Extra Pyramidal Side effects (மருந்தின் அளவு கூடும் போது)
- உடற் தசையில் (பொதுவாக முகம், கழுத்தையண்டிய தசைத் தொகுதிகளில்) சடுதியான சுருக்கம் ஏற்படல்
- ஓரிடத்தில் இருக்க முடியாமமை, கால்களை அசைத்துக் கொண்டிருக்க வேண்டும் போன்ற உணர்வு
- கை கால் நடுக்கம், தசை இறுக்கம், உடற் செயற்பாடுகளின் வேகம் குறைவடைதல் போன்ற பாக்கின்சன் நோயின் அறிகுறிகள்
- நீண்ட காலம் உபயோகிக்கின்றபோது, உதடுகளைச் சப்புதல், தன்னிச்சையான நா அசைவுகள், மற்றும் தன்னிச்சையான ஏனைய அசைவுகள் ஏற்படுதல்
- Prolactin எனும் ஓமோன் அதிகரிப்பதனால் மார்பகங்கள் பருத்தல், மார்பகங்களிலிருந்து பால் சுரத்தல், மாதவிடாய் ஏற்படாதநிலை போன்றன ஏற்படலாம்
- நிறை அதிகரிப்பு
- உடல் உளச் சோர்வு, மனச்சோர்வு
- இருந்துவிட்டு எழும்போது தலைசுற்றதலும், குருதி அமுக்கம் குறைவடைதலும்
- வாய் உலர்தல், சல வெளியேற்றத்தில் சிரமங்கள், பார்வை மங்குதல்
- பாலியல் செயற்பாடுகளில் குறைபாடு
அரிதாக ஏற்படும் பக்கவிளைவுகள்
- வலிப்பு
- மஞ்சட் காமாலை
மருத்துவரை நாடவும்
பொதுவான பக்கவிளைவுகள் ஏற்பட்டால், அதுபற்றி உங்களுக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவரிடம் தெரிவிக்கவும். அரிதான, தீவிரமான, அல்லது கரிசனைக்குரிய வேறு பக்கவிளைகள் ஏற்படுமிடத்து, அருகிலுள்ள ஒரு வைத்தியரை, அல்லது வழமையாகச் சிகிச்சையளிக்கும் உளமருத்துவரை நாடவும்.