Mental Health Society Tellippalai, Jaffna.
Close

Imipramine

மருந்துகள் பற்றி அறிவோம்

Imipramine

அறிமுகம்

இது மனச்சோர்வு நோயைக் குணப்படுத்த உதவும் மருந்து வகைகளில் ஒன்றாகும்.

பயன்பாடு

  • மனச்சோர்வு
  • பதகளிப்புக் கோளாறுகள்

பொதுவான பக்க விளைவுகள்

  • நித்திரை வருதல்
  • கண்பார்வை மங்கலாதல்
  • வாய் உலர்தல்
  • வயிற்றுப்பிரட்டல்
  • மலச்சிக்கல்
  • சல வெளியேற்றத்தைத் தொடங்குவதில் சிரமம் ஏற்படுதல்
  • நிறை அதிகரிப்பு
  • களைப்பு, தலைச்சுற்று, தலையிடி
  • பாலியல் தொழிற்பாட்டுக் குறைபாடுகள்

அரிதாக ஏற்படும் அல்லது கரிசனைக்குரிய பக்கவிளைவுகள்

  • வலிப்பு நோய்
  • நெஞ்சுப் படபடப்பு, சீரற்ற இதயத்துடிப்பு
  • சமிபாட்டுத்தொகுதி செயலிழத்தல்
  • கண்ணில் அமுக்கம் கூடுதல்
  • பித்து (Mania) நிலை உருவாதல்
  • Extra pyramidal நரம்புத் தொகுதியில் ஏற்படுகின்ற பக்க விளைவுகள்

 

மருத்துவரை நாடவும்

பொதுவான பக்கவிளைவுகள் ஏற்பட்டால், அதுபற்றி உங்களுக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவரிடம் தெரிவிக்கவும். அரிதான, தீவிரமான, அல்லது கரிசனைக்குரிய வேறு பக்கவிளைகள் ஏற்படுமிடத்து, அருகிலுள்ள ஒரு வைத்தியரை, அல்லது வழமையாகச் சிகிச்சையளிக்கும் உளமருத்துவரை நாடவும்.