Mental Health Society Tellippalai, Jaffna.
Close

Lithium

மருந்துகள் பற்றி அறிவோம்

Lithium

அறிமுகம்

இருதுருவ மனோபாவக் கோளாறுடையவர்களின் மனநிலையச் சமப்படுத்தி, மனச்சோர்வு, பித்து போன்ற நோய்நிலைமைகள் மீண்டும் மீண்டும் ஏற்படுவதனைத் தடுக்கின்ற ஓர் மனவெழுச்சிச் சமநிலைப்படுத்தியாகப் (Mood stabilizer) பயன்படுத்தப்படும் மருந்து வகைகளில் முக்கியமான ஒரு மருந்தாக இது அமைந்திருக்கின்றது.

பொதுவான பயன்பாடு

  • பித்து (Mania)
  • இருதுருவ மனோபாவக் கோளாறு
  • வழமையான சிகிச்சைகளுக்குக் கட்டுப்படாத மனச்சோர்வு

பொதுவான பக்க விளைவுகள்

  • வயிற்றுப் பிரட்டல்
  • வாய் உலர்தல்
  • சுவை மாற்றம்
  • வயிற்றோட்டம்
  • தாகம் அதிகரித்தல்
  • கை நடுக்கம்
  • உடல் சோர்வு
  • உடல் எடை அதிகரித்தல்
  • முடி உதிர்வு
  • முகப்பரு ஏற்படல்

நச்சு விளைவுகள்

  • மாறாட்டம்
  • நடை தளர்வு
  • கடுமையான கை கால் நடுக்கம்

மருத்துவரை நாடவும்

பொதுவான பக்கவிளைவுகள் ஏற்பட்டால், அதுபற்றி உங்களுக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவரிடம் தெரிவிக்கவும். அரிதான, தீவிரமான, அல்லது கரிசனைக்குரிய வேறு பக்கவிளைகள் ஏற்படுமிடத்து, அருகிலுள்ள ஒரு வைத்தியரை, அல்லது வழமையாகச் சிகிச்சையளிக்கும் உளமருத்துவரை நாடவும்.