மருந்துகள் பற்றி அறிவோம்
Midazolam
அறிமுகம்
Midazolam எனும் மருந்தானது, பதகளிப்பு நோயுடையவர்களுக்குப் பயன்படுத்தப்படும் மன அமைதியை ஏற்படுத்துகின்ற முக்கிய மருந்துகளில் ஒன்றாக இருக்கின்றது. இது குளிசையாகவும், ஊசி மருந்தாகவும் உபயோகிகக்கப்படுகின்றது.
பெதுவான பயன்பாடுகள்
- பொதுவான பதகளிப்பு நோய்
- ஏனைய பதகளிப்பு நிலைகள்
- தூக்கக் குறைபாடு
- வலிப்பு நோய்
பொதுவான பக்கவிளைவுகள்
- தூக்கக் கலக்கம்
- தெறிவினைச் செயற்பாடுகளில் மந்தம்
- சகிப்பு நிலை மற்றும் அடிமை நிலை ஏற்படுதல்
அரிதான பக்கவிளைவுகள்
- கருத்தூன்றல் குறைபாடு
- ஞாபகமறதி
- அந்தரம் மற்றும் அதிகரித்த துடியாட்டம்
- சுவாசத் தொகுதியின் தொழிற்பாடு மந்தமடைதல் (ஊசியாகப் பயன்படுத்தும்போது)
மருத்துவரை நாடவும்
பொதுவான பக்கவிளைவுகள் ஏற்பட்டால், அதுபற்றி உங்களுக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவரிடம் தெரிவிக்கவும். அரிதான, தீவிரமான, அல்லது கரிசனைக்குரிய வேறு பக்கவிளைகள் ஏற்படுமிடத்து, அருகிலுள்ள ஒரு வைத்தியரை, அல்லது வழமையாகச் சிகிச்சையளிக்கும் உளமருத்துவரை நாடவும்.