மருந்துகள் பற்றி அறிவோம்
Propranolol
அறிமுகம்
Propranolol எனும் மருந்தானது, அடிப்படையில் பரிவு நரம்புத் தொகுதியின் செயற்பாடுகளைக் குறைத்துவிடும் இயல்புடைய ஒரு மருந்தாகும். பல்வேறு பயன்பாடுகளையுடைய இந்த மருந்து உளமருத்துவத் துறையிலும் பயன்படுத்தப்படுகின்றது.
பெதுவான பயன்பாடுகள்
- உயர் குருதியழுத்தம்
- ஒற்றைத் தலையிடி
- பதகளிப்புடன் தொடர்புடைய உடல்சார் அறிகுறிகள்
- பரம்பரையாக வருகின்ற நடுக்கம்
- உளமாய நோயெதிர்ப்பு மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவு (ஓரிடத்தில் இருக்க முடியாமை, கால்களை அசைத்துக் கொண்டிருக்க வேண்டும் போன்ற உணர்வு)
பொதுவான பக்கவிளைவுகள்
- இருதயத் துடிப்பு வீதம் குறைவடைதல்
- குருதியழுத்தம் குறைவடைதல்
- களைப்பு
- தலையிடி, தலைச்சுற்று
- நித்திரைக் குழப்பங்கள்
மருத்துவரை நாடவும்
பொதுவான பக்கவிளைவுகள் ஏற்பட்டால், அதுபற்றி உங்களுக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவரிடம் தெரிவிக்கவும். அரிதான, தீவிரமான, அல்லது கரிசனைக்குரிய வேறு பக்கவிளைகள் ஏற்படுமிடத்து, அருகிலுள்ள ஒரு வைத்தியரை, அல்லது வழமையாகச் சிகிச்சையளிக்கும் உளமருத்துவரை நாடவும்.