மருந்துகள் பற்றி அறிவோம்
Quetiapine
அறிமுகம்
Quetiapine எனும் மருந்தானது, பாரிய உளமாய நோயுடையவர்களுக்குப் பயன்படுத்தப்படும் முக்கிய மருந்துகளில் ஒன்றாக இருக்கின்றது. இது மனவெழுச்சி நிலைகளைச் சமப்படுத்திவைத்திருப்பதில் உதவக் கூடிய ஒரு மருந்தாகவும் தொழிற்படுகின்றது.
பொதுவான பயன்பாடுகள்
- உளப்பிளவை
- பித்து நோய்
- இருதுருவ மனோபாவக் கோளாறு
- முதியவர்களில் ஏற்படும் உளமாய அறிகுறிகள் மற்றும் நடத்தைப் பிரச்சினைகள்
பொதுவான பக்கவிளைவுகள்
- நித்திரைத் தூக்கம்
- வாய் உலர்தல்
- நீண்ட காலப் பாவனையின்போது, குருதியில் சீனி மற்றும் கொலஸ்ரோல் அதிகரிப்பு
- உடல் நிறை அதிகரிப்பு
அரிதாக ஏற்படும்பக்கவிளைவுகள்
- இருந்துவிட்டு எழும்போது தலைசுற்றதல்
- வலிப்பு
மருத்துவரை நாடவும்
பொதுவான பக்கவிளைவுகள் ஏற்பட்டால், அதுபற்றி உங்களுக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவரிடம் தெரிவிக்கவும். அரிதான, தீவிரமான, அல்லது கரிசனைக்குரிய வேறு பக்கவிளைகள் ஏற்படுமிடத்து, அருகிலுள்ள ஒரு வைத்தியரை, அல்லது வழமையாகச் சிகிச்சையளிக்கும் உளமருத்துவரை நாடவும்.