மருந்துகள் பற்றி அறிவோம்
Sertraline
அறிமுகம்
இது மனச்சோர்வு நோயை குணப்படுத்த உதவும் மருந்து வகைகளில் ஒன்றாகும்.
பயன்பாடு
- மனச்சோர்வு
- எண்ணச் சுழற்சி நோய்
- பீதி நோய்
- சமூக (சபை) அச்ச நோய்
- மனவடு நோய்
பொதுவான பக்க விளைவுகள்
- வயிற்றுப்பிரட்டல், நெஞ்செரிவு
- பசி குறைவடைதல்
- நித்திரைக் குழப்பம்
- வாய் உலர்தல்
- தலையிடி, தலைச்சுற்று, நடுக்கம்
- பதகளிப்பாக உணர்தல்
- பாலியல் செயற்பாட்டில் குறைபாடுகள்
- உடலில் சோடியம் உப்பின் அளவு குறைவடைதல்
அரிதாக ஏற்படும் பக்கவிளைவுகள்
- இரத்தக் கசிவுகள்
- வலிப்பு
- பித்து நோய் ஏற்படல்
மருத்துவரை நாடவும்
பொதுவான பக்கவிளைவுகள் ஏற்பட்டால், அதுபற்றி உங்களுக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவரிடம் தெரிவிக்கவும். அரிதான, தீவிரமான, அல்லது கரிசனைக்குரிய வேறு பக்கவிளைகள் ஏற்படுமிடத்து, அருகிலுள்ள ஒரு வைத்தியரை, அல்லது வழமையாகச் சிகிச்சையளிக்கும் உளமருத்துவரை நாடவும்.