Mental Health Society Tellippalai, Jaffna.
Close

Sodium valproate

மருந்துகள் பற்றி அறிவோம்

Sodium valproate

அறிமுகம்

இந்த மருந்தானது அடிப்படையில் வலிப்பு நோயை குணப்படுத்தும் மருந்து வகைகளில் ஒன்றாக இருக்கின்றது. இது உளநோய்களிற்கான சிகிச்சையிலும் உபயோகப்படுத்தப்படுகின்றது.

பொதுவான பயன்பாடு

  • வலிப்பு நோய்
  • இருதுருவ மனோபாவக் கோளாறு
  • உளமாய நோய்களின் சிகிச்சையில் ஒரு துணைமருந்தாக

பொதுவான பக்க விளைவுகள்

  • வயிற்று வலி, வயிற்றுப் பிரட்டல்
  • வாய் உலர்தல்
  • உடல் நடுக்கம், சோர்வு
  • கவனச்சிதறல்
  • உடல் எடை அதிகரித்தல்
  • தலை முடி உதிர்வு, தலைமுடியின் வடிவமைப்பில் மாறுதல்
  • ஒழுங்கற்ற மாதவிடாய்

மருத்துவரை நாடவும்

பொதுவான பக்கவிளைவுகள் ஏற்பட்டால், அதுபற்றி உங்களுக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவரிடம் தெரிவிக்கவும். அரிதான, தீவிரமான, அல்லது கரிசனைக்குரிய வேறு பக்கவிளைகள் ஏற்படுமிடத்து, அருகிலுள்ள ஒரு வைத்தியரை, அல்லது வழமையாகச் சிகிச்சையளிக்கும் உளமருத்துவரை நாடவும்.