மருந்துகள் பற்றி அறிவோம்
Topiramate
அறிமுகம்
இது அடிப்படையில் வலிப்பு நோயை குணப்படுத்தும் மருந்து வகைகளில் ஒன்றாகும்.
பயன்பாடு
- வலிப்பு நோய்
- ஒற்றைத் தலைவலி
- இருதுருவ மனோபாவக் கோளாறு
- மதுவார்வம்
பொதுவான பக்க விளைவுகள்
- வயிற்றுப் பிரட்டல்
- பசி குறைவடைதல்
- உடல் எடை குறைவடைதல்
- தலைசுற்றல்
- மனப்பதட்டம்
- கவனச்சிதறல்
- மங்கலான பார்வை
மருத்துவரை நாடவும்
பொதுவான பக்கவிளைவுகள் ஏற்பட்டால், அதுபற்றி உங்களுக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவரிடம் தெரிவிக்கவும். அரிதான, தீவிரமான, அல்லது கரிசனைக்குரிய வேறு பக்கவிளைகள் ஏற்படுமிடத்து, அருகிலுள்ள ஒரு வைத்தியரை, அல்லது வழமையாகச் சிகிச்சையளிக்கும் உளமருத்துவரை நாடவும்.