Mental Health Society Tellippalai, Jaffna.
Close

Trifluoperazine

மருந்துகள் பற்றி அறிவோம்

Trifluoperazine

அறிமுகம்

Trifluoperazine எனும் மருந்தானது, உளப்பிளவை போன்ற பாரிய உளமாய நோயுடையவர்களுக்குப் பயன்படுத்தப்படும் முக்கிய மருந்துகளில் ஒன்றாக இருக்கின்றது.

பொதுவான பயன்பாடு

  • உளப்பிளவை

பொதுவான பக்கவிளைவுகள்

  • Extra Pyramidal Side effects (மருந்தின் அளவு கூடும் போது)
    • உடற் தசையில் (பொதுவாக முகம், கழுத்தையண்டிய தசைத் தொகுதிகளில்) சடுதியான சுருக்கம் ஏற்படல்
    • ஓரிடத்தில் இருக்க முடியாமமை, கால்களை அசைத்துக் கொண்டிருக்க வேண்டும் போன்ற உணர்வு
    • கை கால் நடுக்கம், தசை இறுக்கம், உடற் செயற்பாடுகளின் வேகம் குறைவடைதல் போன்ற பாக்கின்சன் நோயின் அறிகுறிகள்
    • நீண்ட காலம் உபயோகிக்கின்றபோது, உதடுகளைச் சப்புதல், தன்னிச்சையான நா அசைவுகள், மற்றும் தன்னிச்சையான ஏனைய அசைவுகள் ஏற்படுதல்
  • Prolactin எனும் ஓமோன் அதிகரிப்பதனால் மார்பகங்கள் பருத்தல், மார்பகங்களிலிருந்து பால் சுரத்தல், மாதவிடாய் ஏற்படாதநிலை போன்றன ஏற்படலாம்
  • நித்திரை
  • பாலியல் செயற்பாடுகளில் குறைபாடு

அரிதாக ஏற்படும் பக்கவிளைவுகள்

  • இருந்து விட்டு எழும்போது தலை சுற்றுதல்
  • வலிப்பு
  • மஞ்சட் காமாலை

மருத்துவரை நாடவும்

பொதுவான பக்கவிளைவுகள் ஏற்பட்டால், அதுபற்றி உங்களுக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவரிடம் தெரிவிக்கவும். அரிதான, தீவிரமான, அல்லது கரிசனைக்குரிய வேறு பக்கவிளைகள் ஏற்படுமிடத்து, அருகிலுள்ள ஒரு வைத்தியரை, அல்லது வழமையாகச் சிகிச்சையளிக்கும் உளமருத்துவரை நாடவும்.