மருந்துகள் பற்றி அறிவோம்
Zolpidem
அறிமுகம்
Zolpidem எனும் மருந்தானது, தூக்கத்தை வழமை நிலைக்குக் கொண்டுவர உதவுகின்ற முக்கிய மருந்துகளில் ஒன்றாக இருக்கின்றது. இது benzodiazepines தொகுதியைச் சேர்ந்த மருந்துகளில் இருந்து வேறுபட்ட ஒரு மருந்தாகும்.
பெதுவான பயன்பாடுகள்
- தூக்கமின்மை
பொதுவான பக்கவிளைவுகள்
- தூக்கக் கலக்கம்
- தலையிடி, தலைச்சுற்று
- வயிற்று வலி, குமட்டல், வாந்தி, வயிற்றோட்டம்
- களைப்பு
மருத்துவரை நாடவும்
பொதுவான பக்கவிளைவுகள் ஏற்பட்டால், அதுபற்றி உங்களுக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவரிடம் தெரிவிக்கவும். அரிதான, தீவிரமான, அல்லது கரிசனைக்குரிய வேறு பக்கவிளைகள் ஏற்படுமிடத்து, அருகிலுள்ள ஒரு வைத்தியரை, அல்லது வழமையாகச் சிகிச்சையளிக்கும் உளமருத்துவரை நாடவும்.