Mental Health Society Tellippalai, Jaffna.
Close

Zuclopenthixol decanoate

மருந்துகள் பற்றி அறிவோம்

Zuclopenthixol decanoate

அறிமுகம்

Zuclopenthixol decanoate எனும் மருந்தானது, பாரிய உளமாய நோயுடையவர்களுக்குப் பயன்படுத்தப்படும் முக்கிய மருந்துகளில் ஒன்றாக இருக்கின்றது. இது நீண்ட காலம் உடலில் நின்ற பலனளிக்கக் கூடிய ஊசி மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

பொதுவான பயன்பாடுகள்

  • உளப்பிளவை
  • இருதுருவ மனோபாவக் கோளாறு

பொதுவான பக்கவிளைவுகள்

  • Extra Pyramidal Side effects (மருந்தின் அளவு கூடும் போது)
    • உடற் தசையில் (பொதுவாக முகம், கழுத்தையண்டிய தசைத் தொகுதிகளில்) சடுதியான சுருக்கம் ஏற்படல்
    • ஓரிடத்தில் இருக்க முடியாமமை, கால்களை அசைத்துக் கொண்டிருக்க வேண்டும் போன்ற உணர்வு
    • கை கால் நடுக்கம், தசை இறுக்கம், உடற் செயற்பாடுகளின் வேகம் குறைவடைதல் போன்ற பாக்கின்சன் நோயின் அறிகுறிகள்
    • நீண்ட காலம் உபயோகிக்கின்றபோது, உதடுகளைச் சப்புதல், தன்னிச்சையான நா அசைவுகள், மற்றும் தன்னிச்சையான ஏனைய அசைவுகள் ஏற்படுதல்
  • Prolactin எனும் ஓமோன் அதிகரிப்பதனால் மார்பகங்கள் பருத்தல், மார்பகங்களிலிருந்து பால் சுரத்தல், மாதவிடாய் ஏற்படாதநிலை போன்றன ஏற்படலாம்
  • இருந்துவிட்டு எழும்போது தலைசுற்றதல்
  • நித்திரைத் தூக்கம்
  • நிறை அதிகரிப்பு

அரிதாக ஏற்படும் பக்கவிளைவுகள்

  • வலிப்பு
  • மஞ்சட் காமாலை

மருத்துவரை நாடவும்

பொதுவான பக்கவிளைவுகள் ஏற்பட்டால், அதுபற்றி உங்களுக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவரிடம் தெரிவிக்கவும். அரிதான, தீவிரமான, அல்லது கரிசனைக்குரிய வேறு பக்கவிளைகள் ஏற்படுமிடத்து, அருகிலுள்ள ஒரு வைத்தியரை, அல்லது வழமையாகச் சிகிச்சையளிக்கும் உளமருத்துவரை நாடவும்.